லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்று, தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி.

முதல் போட்டியை ஏற்கனவே வென்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில், ‍டேவிட் வார்னர் டக் அவுட் ஆனார். கேப்டன் ஆரோன் பின்ச் 40 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 35 ரன்களும், மேக்ஸ்வெல் 26 ரன்களும், ஆஷ்டன் ஆகர் 23 ரன்களும் அடித்தனர். ஸ்டீவ் ஸ்மித் 10 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய அணியில் 2 பேர் ரன்அவுட் ஆயினர்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், துவக்க வீரர் ஜோஸ் பட்லர் 77 ரன்களும், டேவிட் மாலன் 42 ரன்களும் அடிக்க, 18.5 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எட்டி வென்றது இங்கிலாந்து.