லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் எம்.எல்.ஏ., மற்றும் 12 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நாடு முழுவதும் 4வது கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகமாகியுள்ளது. மாநிலத்தில் இதுவரை 2.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில்  1.91 லட்சம் பேர் குணம் பெற்றுவிட்டனர். தற்போது 59,963 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். அமைச்சர்கள் 12 பேருக்கும் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்கள் தவிர, 2 எம்.எல்.ஏ.,க்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அவர்களில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கின் மகனும், நொய்டா தொகுதியின் எம்.எல்.ஏ.,வுமான பங்கஜ் சிங்கும் ஒருவர். மற்றவர் ஆக்ரா ஊரகப்பகுதியின் ஹேமலதா திவாகர் ஆவார்.

[youtube-feed feed=1]