கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் சீன ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திய பிறகு சீனாவின் டிக் டாக் உட்பட 59 மொபைல் செயலிகளை தடை செய்தது அரசு .
இரண்டாவது கட்டமாக பப்ஜி உட்பட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
பப்ஜி செயலி தென் கொரிய நிறுவனத்துக்கு சொந்தமானது என்றாலும், அந்நிறுவனத்தில் சீன நிறுவனத்தின் பங்குகள் இருப்பதால், இது சீனாவுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சூழ்நிலையில், பப்ஜி விளையாட்டுக்கு மாற்றாக, ‘பாஜி’ என்ற பெயரில் பெங்களூருவைச் சேர்ந்த ‘என்கோர் கேம்ஸ்’ என்ற நிறுவனம் வடிவமைத்து வருகிறது .‘‘பாஜி – பியர்லெஸ் அண்ட் யுனைடெட் : கார்ட்ஸ்’ (FAU-G Or Fearless And United: Guards) என்ற பெயரில் அக்டோபர் மாதம் வெளியாகிறது
சீனாவுக்கு எதிரான மனநிலை இந்திய மக்களிடம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய சுயசார்பு அல்லது பிரதமர் மோடியின் ‘ஆத்ம நிர்பார்’ திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பாஜி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த பாஜி செயலி பாலிவுட் நடிகர் அக் ஷய் குமாருடன் இணைந்து உருவாக்கப்பட்டு வருகிறது. அக் ஷய் குமாரின் தந்தை ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர்.