ஜெனிவா: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2கோடியே 70லட்சத்தை கடந்துள்ளது. தினசரி அதிகரித்து வரும் பாதிப்புகள் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது.
இன்றுகாலை 7மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 2லட்சத்த 70ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரேநாளில் உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 2,70,44,647 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 1,91,46,917 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,83,002 ஆக அதிகரித்து உள்ளது.
கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில், முதலிடத்தில்அமெரிக்கா தொடர்ந்து இருந்து வருகிறது. அங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,431,152 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 192,818 ஆகவும், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,707,000 ஆக உள்ளது. தற்போதைய நிலையில், 2,531,334 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2வது இடத்தில் தொடர்ந்து பிரேசில் நாடு உள்ளது. அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,123,000 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 126,230 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். 3,296,702 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில், 700,068 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மொத்த பாதிப்பில் 3வது இடத்தில் இந்தியா தொடர்ந்து வருகிறது. ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது.. இந்தியாவில், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,110,839 ஆக உள்ளது. இதுவரை 70,679 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 3,177,673 பேர் குணமடைந்து உள்ளனர். 862,487பேர் சிகிச்சையில் உள்ளது.