சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தில் சேகராகவும் புதுப்பேட் டை படத்தில் மணியாகவும், நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித் தவர் ரதீஷ் வீரா. இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான அசுரன் படத்தில் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை அள்ளினார்.


கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் யதார்த்தம் மிகுந்த தனித்துவமான நடிப் பால் எளிதில் பலரையும் கவர்பவர் நடிகர் நிதிஷ் வீரா. தற்போது எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்திலும், அறம் பட இயக்குனர் கோபி நயினார் இயக்கும் கோல் படத்தி லும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின் றார். மேலும் புஷ்கர் காயத்ரி இயக்கும் வெப் சீரியஸிலும் நடிக்கின்றார். இன்னும் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டி ருக்கிறார்.
நிதிஷ் வீரா, அசுரன் படத்தில் ஏற்ற பாண்டியன் வேடத்தில் நடிக்க மீண்டும் அழைப்பு வந்திருக்கிறது. இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தமிழில் நடித்த அதே வேடத்தில் தெலுங்கிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சமீபத்தில் நிதீஷ் வீரா கோட் சூட் உடையில் எடுத்த போட்டோஷூட் நடத்தி தன்னால கிராமத்து வேடமட்டு மல்லாமல் ஸ்டைலிஷான வேடங்க ளிலும் என்னால் நடிக்க முடியும் என தெரிவித்திருக்கிறார்.

[youtube-feed feed=1]