மும்பை: மும்பையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 15 நாட்களில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
வர்த்தக நகரான மும்பையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்து உள்ளது. புதியதாக 1,929 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,52,024 ஆகியுள்ளது.
அவர்களில் 1,21,671 பேர் குணம் பெற்றுள்ளனர். ஆனால், சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 15 நாட்களில் 20 சதவீதம் அதிகமாகி உள்ளது. அதாவது ஆகஸ்ட் 21 அன்று 18,299 பாதிப்புகள் இருந்துள்ளன. நேற்றைய தினம் இதுவே 22,222 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை கார்ப்பரேஷன் பொது சுகாதாரத்துறையின் மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகள் கடந்த வாரத்திற்குள் தினசரி கொரோனா அதிகரித்துள்ளதாக கூறி உள்ளனர்.
மும்பையில் ஊரடங்கு, சமீபத்திய விநாயகர் சதுர்த்தி திருவிழா காரணமாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இது அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.