கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால், மாநிலத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு  ஜூலை 20ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநிலத்தில் பரவலாக கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. மேலும் பல்வேறு தளர்வுகளுடன்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் செயல்பட ஆரம்பித்து உள்ளன.

இந் நிலையில், சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படலாம் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கி விதியான  2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது