நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி நம்பிக்கையளித்த இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியடைந்து ஏமாற்றினார்.
ஆஸ்திரேலியாவின் டொமினிக்கை இரண்டாவது சுற்றில் எதிர்கொண்ட சுமித் நாகல், 3-6, 3-6, 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். எனவே, அமெரிக்க ஓபனில் இந்தியர் ஒருவர் பெரிளவில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
மற்றொரு பக்கம் பெண்கள் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் செரினா 6.வில்லியம்ஸ், ரஷ்யாவின் காஸ்பர்யனை 6-2, 6-4 என்று வீழ்த்தினார். இன்னொரு அமெரிக்க நட்சத்திரம் சபைன் கெனின், கனடாவின் லேலாவை 6-4, 6-3 என்ற கணக்கில் வென்றார்.