16 வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, நிழல்கள், கிழக்கே போகும் ரயில் என வெற்றி படங்களின் வரிசையில் தொடங்கி முதல் மரியாதை. கிழக்கு சிமையிலே, பசும்பொன் என பல்வேறு மறக்க முடியாத படங்களை இயக்கி அளித்திருப்பவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.


இந்த ஆண்டு தொடக்கத்தில், மீண்டும் ஒரு மரியாதை என்ற படத்தை மிகவும் மார்டன் காதல் கதையாக இயக்கினார் பாரதிராஜா. அதில் கதை நாயகனாக அவரே நடித்தார்.


சமீபகாலமாக படம் இயக்குவதை பெரும்பகுதி குறைத்துக்கொண்டு நடிப்பில் கவனம் செலுத்துகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் கென்னடி கிளப், நம்ம வீட்டு பிள்ளை படங்கள் வந்தன. தற்போது மாநாடு படத்தில் நடிக்கிறார். நடிப்பு தவிர சமீபத்தில் தமிழ்நாடு திரைப் பட நடப்பு சங்க, என்ற அமைப்பை உருவாக்கினார். அச்சங்க தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.


கொரோனா ஊரடங்கு சமயத்தில் படப் பிடிப்பு தொடங்க வேண்டும், தியேட்டர் திறக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதற்கிடையில் வித்தியாசமான கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் பாரதிராஜா. அந்த படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது. ராணுவ உடைபோல் காஸ்டியும் அணிந்து அவர் அளித்திருக்கும் போஸ் பாரதிராஜாவுக்கு இளமை திரும்பிவிட்டது என்று ரசிகர்களை கமெண்ட் பகிரச் செய்திருக்கிறது.