நியூயார்க்: யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ள இந்தியாவின் சுமித் நாகல், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பல நட்சத்திரங்கள் விலகிய நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்காவின் பிராட்லியை சந்தித்தார்.
இதில். 6-1, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் அவர். கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில், இரண்டாவது சுற்றுக்கு இவர் முன்னேறுவது இதுவே முதன்முறை என்பது கவனிக்கத்தக்கது.
இதன்மூலம், ஒரு இந்திய வீரர், 7 ஆண்டுகளுக்குப் பிறகு, யு.எஸ். ஓபன் தொடரில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவின் சோம்தேவ், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.