கொரானா பொதுமுடக்கத்தில் இருந்து, வழிப்பாட்டுத் தலங்கள், பொது போக்குவரத்து, மால்கள் திறப்பு உள்பட பல்வேறு தளர்வுகளை தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
இதையடுத்து, இன்று தமிழகம் முழுவதும் உள்ள வழிப்பாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. முன்ன தாக அனைத்து கோவில்களும், கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, இன்று அதிகாலை கோவில்கள் திறக்கப்பட்டு வழக்கமான வழிபாடுகள் நடத்தப் பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் நின்று சுவாமி தரிசனம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
அறுபடை முருகன் கோவில்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல கோவில்கள் மற்றும் சென்னை கபாலீஸ்வரர் உள்பட அனைத்து கோவில்களும் பாரம்பரிய வழிபாடுகளுடன் திறக்கப்பட்டது.
பக்தர்கள் அதிகாலை முதலே காத்திருந்து, 5 மாதங்களுக்கு பிறகு, ஆண்டவனை உள்ளம் உருக பிரார்த்தி, ஆண்டவனை தரிசித்தி மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து வருகின்றனர். பல பெரிய கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது
பக்தர்கள் அனைவரும், அரசு வழிகாட்டுதலின்படி முக கவசம் அணிந்து வந்து சுவாமி தரிசனம் பெற்று வருகின்றனர்.இன்றுமுதல் தமிழகம் முழுவதும் அனைத்து வழிப்பாட்டுத் தலங்களும் அதிகாலை முதலே திறக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. கோவிலுக்கு வரத் தொடங்கிய ஏராளமான பக்தர்களுக்கு, டோக்கன் முறையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. . பழனி, திருச்செந்தூர், திருத்தணி முருகன் கோவில் களில் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பழனி முருகன் கோவிலுக்கு ஆன்லைன் மூன்பதிவு செய்துவிட்டே வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கீழ சன்னதி கோபுர வாயில் மட்டுமே திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 5 மாத கால இடைவெளிக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலில், பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோன்று ஸ்ரீரங்கம், கரூர், திருச்சி மற்றும் காஞ்சிபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்ட கோவில்களிலும் பக்தர்கள் ஆர்வமுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னையின் பிரபலமான கபாலீஸ்வரர், வடபழனி முருகன் கோவில் உள்பட அனைத்து கோயில்களும் திறப்பப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டன. சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் கொரோனா முன்னெச்சரிக்கையாக மாஸ்க் அணிந்திருந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
5 மாதங்களாக வீடுகளிலேயே முடங்கி கிடந்த மக்கள் தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் உள்ள பிரபலமான கபாலீஸ்வரர் உள்பட அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு உள்ளனத. கோவில் முன்பு மக்கள் வரிசையாக காத்திருக்கும் காட்சி தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. முண்டக கனி அம்மன் கோவில் வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் போன்ற மற்ற உள்ளூர் சன்னதிகள் மூடப்பட்டுவிட்டன. சுத்திகரிப்பு பணி முடிந்ததும் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மயிலை கபாலீஸ்வரர் கோவில் முன்பு பக்தர்கள்
காஞ்சிபுரத்தில் கோவிலின் முன்பு பக்தர்கள் காத்திருக்கும் காட்சி