மிழ்நாட்டில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
அந்த கட்சியில் இரு முறை பிளவு ஏற்பட்டதால், இரண்டு முறை அந்த சின்னம் முடக்கி வைக்கப்பட்டு, சண்டை முடிவுக்கு வந்த பின், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கேரள காங்கிரஸ் ( மானி பிரிவு) கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த கட்சியின் தலைவர் கே.எம்.மானி கடந்த ஆண்டு மரணம் அடைந்த நிலையில், கட்சி இரண்டு பட்டது.

ஒரு பிரிவு மானியின் மகன் ஜோஸ் தலைமையிலும், இன்னொரு பிரிவு கட்சியின் செயல் தலைவர் பி.ஜே.ஜோசப் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது.

இருவருமே இரட்டை இலை சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்தனர்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.

‘’இரட்டை இலை சின்னம் ஜோஸ் பிரிவு கேரள காங்கிரசுக்கே சொந்தம்’’ என ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.

இதனை ஜோஸ் தரப்பு கொண்டாடி கொண்டிருக்க, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஜோசப் அறிவித்துள்ளார்.

-பா.பாரதி.