சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் புதிதாக 6,495 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்து இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று  ஒரே நாளில் 1,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,34,436 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 1,427 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,18,235 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில், 13,472 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில்  16 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,729 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

சென்னையில் 60.50% ஆண்களும் 39.50% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நேறறு (31.08.2020) மட்டும், 13,100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.


மண்டலம் வாரியாக கொரோனா தொற்று குணமடைந்தோர்:

1    திருவொற்றியூர்    3,992
2     மணலி        1,946
3     மாதவரம்        4,209
4     தண்டையார்பேட்டை   10,511
5     ராயபுரம்        12,191
6     திருவிக நகர்        9,030
7     அம்பத்தூர்        8,134
8     அண்ணா நகர்    13,451
9     தேனாம்பேட்டை    11,763
10     கோடம்பாக்கம்    13,571
11     வளசரவாக்கம்    7,301
12     ஆலந்தூர்        4,080
13     அடையாறு       8,887
14     பெருங்குடி        3,698
15     சோழிங்கநல்லூர்    3,129
16     இதர மாவட்டம்    2,342.

மண்டலம் வாரியாக  கொரேனா  சிகிச்சை பெறுவோர் விவரம்:

1   திருவொற்றியூர்    299
2     மணலி        156
3     மாதவரம்        554
4     தண்டையார்பேட்டை    825
5     ராயபுரம்        953
6     திருவிக நகர்        1,007
7     அம்பத்தூர்        1,099
8     அண்ணா நகர்    1,572
9     தேனாம்பேட்டை    988
10     கோடம்பாக்கம்    1,487
11     வளசரவாக்கம்    997
12     ஆலந்தூர்        829
13     அடையாறு        1,312
14     பெருங்குடி         580
15     சோழிங்கநல்லூர்    564
16     இதர மாவட்டம்   270 பேர்