சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக மேலும, 6,495 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று ஒரேநாளில் 6409 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.
இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 94 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 1249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ளது. இதுவரை பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி உள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 6,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரேனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 94 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,231 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,406 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,62,133 -ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 85.80% ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், 52,721 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று ஒரே நாளில், 83,250 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 47,38,047 பேருக்கு தொற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 149 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 63 அரசு மருத்துவமனைகளிலும், 86 தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
பிற மாநிலங்களில் இருந்து இன்று தமிழகத்திற்கு வந்த 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 2,54,837 பேரும், பெண்கள் 1,67,219 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் 12 வயதிற்குள் 19,564 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 3,47,773 பேரும், 60 வயதிற்கு மேல் 54,748 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.