சென்னை: தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ந்தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வ தாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழக லாரி உரிமையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகள் உள்பட நாடு முழுவதும் 565 சுங்கச்சாவடிகள் உள்ளன. குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி டோல் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம் பர் 1ந்தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
இந்த கட்ட உயர்வு சுங்கச்சாவடிகளின் பட்டியல் தமிழகத்தன் 20 சுங்கச்சாவடிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், டோல் கட்டணம் உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, லாரிகள் ஓடாததால், லாரி உரிமையாளர்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், தங்களுக்கு நிவாரணம் வேண்டும் என மத்தியஅரசிடம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மத்தியய நெடுஞ்சாலைத்துறை, சுங்கக்கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
நாங்களோ, மேலும் 6 மாதம், சுங்கவரி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், வருடாந்திர கட்டணத்தை ஒரு கட்டணமாக செலுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், மத்தியஅரசு எங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்க வில்லை.
பூட்டுதலின் போது, மார்ச் 23 முதல் ஏப்ரல் 20 வரை ஒரு மாதத்திற்கு சுங்கச்சாவடிகள் மூடப் பட்டன. பின்னர் தளர்வுகள் அறிக்கப்பட்ட பிறகு, சுமார் 55 முதல் 60% லாரிகள் மாநிலத்தில் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், வாகனங்கள் வழக்கத்தை விட இருமடங்கு நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. இதனால் அரசு அறிவித்துள்ள சுங்கக்கட்டணத்தை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ள 21 சுங்கச்சாவடிகளின் விவரம்:
1) புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்),
2) எலியார்பதி (மதுரை),
3) ராசம்பாளையம் (நாமக்கல்),
4) ஒமலூர், சமயபுரம் (திருச்சி),
5) வீரசோழபுரம் (சேலம்),
6) மேட்டுபட்டி (சேலம்)
7) கொடைரோடு(திண்டுக்கல்)
8) வேலஞ்செட்டியூர் (கரூர்),
9) பாளையம் (தர்மபுரி)
10) விஜய மங்கலம் (குமாரபாளையம்)
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.