டெல்லி: தலைநகர் டெல்லியில் மேலும் 1,808 பேருக்கு கொரோனா உறுதியானதாக அம்மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. ஆனால் இப்போது நிலைமை மாறி உள்ளது. அதிலும் குறிப்பாக 3 நாட்களாக அதிகரிக்க தொடங்கியது.
இன்று ஒரே நாளில் 1,808 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து, தலைநகர் டெல்லியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,69,412 ஆக உயர்ந்துள்ளது. 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டு மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,389 ஆக உள்ளது. மேலும் 1,446 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,473 ஆக உயர்ந்துள்ளது.
13,550 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]