சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர், மொத்தம் எண்ணிக்கை 4,09,238 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில், நேற்று ஒரே நாளில் 1,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா தொற்று குறித்து சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,31,869 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று மட்டுமே 1,201 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,15,649 பேர்.
நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 28 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,690 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
தற்போதைய 13,530 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று மட்டும் 13.827 பேருக்கு தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
சென்னையில் 60.17% ஆண்களும் 39.83% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(28.08.2020) மட்டும், 13,827 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
சென்னையில் மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்
1 திருவொற்றியூர் 3,952
2 மணலி 1,909
3 மாதவரம் 4,088
4 தண்டையார்பேட்டை 10,283
5 ராயபுரம் 12,081
6 திருவிக நகர் 8,828
7 அம்பத்தூர் 7,909
8 அண்ணா நகர் 13,199
9 தேனாம்பேட்டை 11,666
10 கோடம்பாக்கம் 13,253
11 வளசரவாக்கம் 7,125
12 ஆலந்தூர் 4,006
13 அடையாறு 8,668
14 பெருங்குடி 3,568
15 சோழிங்கநல்லூர் 3,042
16 இதர மாவட்டம் 2,072.
மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்
1 திருவொற்றியூர் 263
2 மணலி 160
3 மாதவரம் 553
4 தண்டையார்பேட்டை 916
5 ராயபுரம் 842
6 திருவிக நகர் 1,065
7 அம்பத்தூர் 1,177
8 அண்ணா நகர் 1,562
9 தேனாம்பேட்டை 942
10 கோடம்பாக்கம் 1,565
11 வளசரவாக்கம் 945
12 ஆலந்தூர் 727
13 அடையாறு 1,310
14 பெருங்குடி 581
15 சோழிங்கநல்லூர் 552
16 இதர மாவட்டம் 370 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.