சென்னை: 90% நுரையீரல் பிரச்சினையுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 45வயது கொரோனா நபர், அரசு மருத்து வர்களின் தீவிர சிகிச்சையால் 60நாளில் குணம்பெற்று வீடு திரும்பியுள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.
இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேவேளையில் அரசு மருத்துவர்களில் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதப்படுகிறது.
இதுகுறித்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சாலமன் (வயது 45) என்ற நபர் கடந்த ஜூன் மாதம் 26ந்தேதி அன்று, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், சுவாசப் பிரச்சினை மற்றும் கடுமையான காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியான நிலையில், ஐசியு பிரிவில் வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி, மருத்துவர்கள் எம்.சுஜாதா, ரஞ்சனி, பத்மநாபன், நோடல் அதிகாரி மருத்துவர் ரமேஷ் கொண்ட குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
சுமார் 60 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, கடந்த 24ந்தேதி (24-08-2020) அன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அசத்தலான பணி மற்றும் முயற்சி காரணமாக, அவர் குணமடைந்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசு மருத்துவர்களின் திறமை மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
அதே வேளையில் இதே, சிகிச்சை தனியார் மருத்துவமனையில் கொடுக்கப்பட்டிருந்தால் சுமார் ரூ.1 கோடி வரை செலவாகி இருக்கும் என்பதும் மறுப்பதிற்குல்ல.