டிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்தபோது அதற்கு பாலிவுட் வாரிசு நடிகைகள் சுஷாந்தை அவமத்தித்தனர். இதில் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்ததாக நடிகை கங்கனா ரனாவத் கூறினார். இந்த வாதம் நெட்டில் அதிகரித்து சுஷாந்த் ரசிகர்கள் வாரிசு நடிகைகள் திட்டித் தீர்ந்த்தனர். நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, அலியாபட் உள்ளிட்ட பல நடிகைகளை ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்தார்கள். இதைய டுத்து அந்த நடிகைகள் இணைய தளத்திலிருந்தி விலகி இருந்தனர்.


சோனாக்‌ஷி சின்ஹா தன்னை அவதூறாக விமர்சித்தவரை பற்றி சைபர் கிரைம் போலீசில் புகார். அளித்தார். அதைஏற்று போலீசார் விசாரித்து வந்தனர்.
ஐதராபாத்தை சேர்ந்த சஷிகாந்த் ஜாதவ் (24) என்பவரை போலீசார் கைது செய் தனர். சைபர் கிரைம் போலீ சாருக்கு சோனாக்‌ஷி நன்றி தெரிவித்தார்.
பிரபல இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹா வின் மகள் சோனாக்‌ஷி சின்ஹா. இவர் ரஜினியுடன் ’லிங்கா’ படத்தில் கதாநாய கியாக நடித்தவர்.
இதுகுறித்து சைபர் கிரைம் ராஷ்மி கரண்டிகர் கூறும்போது,’பெண்களுக்கு இணையதளம் பாதுகாப்பானதாக மாற்றவே சைபர் கிரைம் போலீஸ் பணியாற்று கிறது. சோனாக்‌ஷி அளித்த புகாரின் அடிப் படையில் அவரை அவதூறாக பேசியவரை போலீஸ் கைது செய்துள்ளது’ என்றார்.