பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று பாதித்து தனியார் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அவருக்கு உயிர்காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சை செயற்கை அளிக்கப்படுகி றது.
எஸ்பிபி பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பாடகி மாளவிகா பங்கேற்றதால்தான் எஸ்பிபிக்கு கொரோனா பரவியது என இணைய தளத்தில் தகவல் பரப்பி அவரை திட்டி வருகின்றனர்.
இது குறித்து ஃபேஸ்புக்கில் விளக்கம் அளித்திருக்கிறார் மாளவிகா.
கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி எஸ்.பி.பாலசுப்ரமணி யம் பங்கேற்ற நிகழ்ச்சி படப்பிடிப்பு நடந்தது. மறுநாள் ஜூலை 31ம் தேதி நடந்த படப்பிடிப் பில்தான் நான் உள்பட 4 பாடகிகள் பங்கேற்றோம்.கடந்த 5 மாதங்களாக நான் வெளியே செல்ல வில்லை. இந்த நிகழ்ச்சிக்காகத் தான் முதல்முறையாக வெளியே சென்றேன். சென்ற ஆகஸ்ட் 5ம் தேதி எஸ்.பி.பி சாருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் நானும் 8ம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண் டேன்.
துரதிர்ஷ்டவசமாக எனக்கும் என் பெற்றோருக்கும், என் குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிந்தது. வதந்தி பரப்புபவருக்கு எதிராக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன். போலியான தகவலை தயவு செய்து பரப்பாதீர்கள்
இவ்வாறு மாளவிகா தெரிவித்திருக்கிறார்.