வாஷிங்டன்: இஸ்ரேல் – அமீரக நாடுகளுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் செளதி அரேபியா இணைய விரும்பினால், அதன்பொருட்டு உதவுவதற்கு தயார் என்று முன்வந்துள்ளார் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்.
“இஸ்ரேல் – அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில், செளதி அரேபியா பங்கேற்கும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி அந்நாடு விரும்பினால், அதை நிறைவேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள தயாராக உள்ளேன்” என்றார் டிரம்ப்.
ஆனால், செளதி நாட்டின் வெளியுறவு அமைச்சர் பைசல் பின் தெரிவித்துள்ளதாவது, “பாலஸ்தீன விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் வரை இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை . டிரம்ப் கூறினார் என்பதற்காக அமைதி ஒப்பந்தத்தில் நாங்கள் இணைய வேண்டிய அவசியமில்லை” என்றார்.
இஸ்ரேல்-அமீரகம் இடையிலான இந்த அமைதி ஒப்பந்தத்தை பாலஸ்தீனம், துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன.
ஜெருசலேமை தனது அதிகாரப்பூர்வ தலைநகரமாக்கும் இஸ்ரேலின் முயற்சிக்கு, டொனால்ட் டிரம்ப் பெரியளவில் துணை நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.