அக்ஷய் குமார், ஹுமா குரேஷி, லாரா தத்தா, வாணி கபூர் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய இந்திப்படம் ‘பெல்பாட்டம்’.
1980 களில் நடந்த நிஜ சம்பவத்தை களமாக கொண்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடைபெறுகிறது.

இதற்காக அக்ஷய் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த 5 ஆம் தேதி சிறப்பு விமானத்தில் மும்பையில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர்.
கொரொனா விதிமுறைகளை பின்பற்றி அங்கு 14 நாட்கள் படக்குழுவினர் தனிமை படுத்திக்கொண்டனர்.
’தனிமைக்காலம்’ நிறைவடைந்த நிலையில் பெல்பாட்டம் படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது.
ஒரு கையில் முகக்கவசத்தையும் மறு கையில் கிளாப் போர்டையும் பிடித்தபடி அக்ஷய் குமார் . இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய பதிவில் ‘’ அனைத்து விதிமுறை களையும் கடை பிடித்து பெல்பாட்டம் ஷுட்டிங்கை ஆரம்பித்து விட்டோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டில் மீண்டும் தொடங்கியுள்ள முதல் படப்பிடிப்பு, இது தான்.
-பா.பாரதி.
[youtube-feed feed=1]