ஸ்ரீசைலம்: தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீசைலம். இந்த அணையின் இடது கரை கால்வாயில் அமைந்துள்ள நிலத்தடி நீர்மின் நிலையத்தில் இன்று அதிகாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டு தீ பரவியது. இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.  இதில் 8  பேர் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆந்திரா, தெலுங்கான மாநிலங்களுக்கு இடையே உள்ளது ஸ்ரீசைலம் அணை. இதையொட்டி உள்ள  நீர்மின் நிலையத்தின் 4 வது அலகு முனையத்தில் இன்று அதிகாலை வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக நீர் நீர்மின் நிலையத்தினுள் 8 பேர் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. 
சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படும் 17 பேரில், 9 பேர் சுரங்கப்பாதை வழியாக பாதுகாப்பிற்கு தப்பினர். மீதமுள்ள 8 பேர்  சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.  சிக்கியவர்களில் 5 டி.எஸ். ஜென்கோ ஊழியர்கள் எனவும்,  மூன்று  பேர் தனியார் நிறுவன ஊழியர்கள் என்று கூறப்படுகிறது.

தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இருந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்து காரணமாக கடும் புகை ஏற்பட்டுள்ளதால் மீட்பு நடவடிக்கை களுக்கு இடையூறு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின் நிலையத்தின் யூனிட் 4 இல் தீ விபத்து ஏற்பட்டது. ஷார்ட் சர்க்யூட் காரணமாக பேனல் போர்டுகள் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த இடம் புகையால் சூழ்ந்துள்ளது என கூறப்படுகிறது. வெடி விபத்தால் கடும் புகை ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

விபத்து ஏற்பட்ட பகுதியை காண ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அங்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.