டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 68ஆயிரத்து 507 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 29,04,329 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பிபாக சில மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தினசரி அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில்,  உலக அளவில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 68,507 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியான நிடிலயில், பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை  29,04,329 ஆக  உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போதைய நிலையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 6,90,884ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 61,873 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால்வ நாடு முழுவதும் கொரோனா  தொற்று பாதிப்பு சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்யுள்ளோர்  எண்ணிக்கை 21,57,941 ஆக உயர்ந்துள்ளது. குணமடை வோர் சதவிகிதம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 981 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை  உயிரிழந்தோர்  நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 54,971 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் தொற்று பாதிப்பில்  மகாராஷ்டிரா மாநிலம்  தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு  நேற்று ஒரே நாளில் 14,6475 பேருக்கு தொற்றுபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,43,289 ஆஆக அதிகரித்து உள்ளது.

2வது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.  நேற்று 5,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 3,61,435 ஆக உள்ளது.

3வது இடத்தில் ஆந்திர மாநிலம் உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 9,393 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 3,25,396 ஆக உயர்ந்துள்ளது.

4வது இடத்தில் கர்நாடக மாநிலம் உள்ளது, அங்கு நேற்று 7,386 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி யானது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,56,975 ஆக அதிகரித்துள்ளது.

5வது இடத்தில்  உத்தரபிரதேச மாநிலம் உள்ளது. இங்கு நேற்று 4,824 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,72,334 ஆக உயர்ந்துள்ளது.