ஜெனிவா: உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்பட பல நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இன்று (ஆகஸ்டு 21) நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 2,28,56,132 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும், 7லட்சத்து 96ஆயிரத்து 992ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை இதுவரை 2,22,94,372 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 1,55,11,668 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,96,992 ஆக அதிகரித்து உள்ளது.
உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,746,272 ஆகவும், இதுவரை 177,424 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதுவரை 3,095,484 பேர் குணமடைந்து உள்ளனர்.
2வது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,505,097 ஆகவும், இதுவரை 112,423 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 2,653,407 பேர் குணமடைந்து உள்ளனர்.
3வது இடத்தில் இந்தியா உள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,904,329 ஆக உள்ளது. இதுவரை 54,975 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 371,638 பேர் குணமடைந்து உள்ளனர்.