ம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களுடன் நடித்தவர் சீனியர் நடிகை சரோஜாதேவி. அவர் எஸ்பிபிக் காக பிரார்த்தனை செய்துக்கொண்டு கூறியதாவது:
பாலுவிற்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டேன். ரொம்ப சங்கடப்பட்டேன். அவர் அவ்ளோ நல்ல மனிதர். ஒரு விழாவில் அவரிடம் ’நீங்க தேன் சாப்பிடுவீங்களா?’னு கேட்டேன்.
‘ஏன் அப்படி கேட்கிறீங் க’ன்னு கேட்டார்.


’இல்ல, உங்க குரல் அவ்ளோ இனிமையா இருக்குது’ன்னு சொன்னேன். அதற்கு அவர்
‘ஏன் நீங்களும் தான் அழகாக இருக்கீங்க’னு சொன்னார்.
அவர் உடல்நலம் சரியில்லாம இருப் பதை பார்த்து இந்தியாவே கவலைப் படுது. என் ஆயுளையும் சேர்த்து அவருக்கு கொடு என கடவுளை வேண்டிக் கொள்கிறேன். அவர் நல்ல படியாக குணமடைந்து மீண்டும் வந்து பாடணும், ரொம்ப வருஷம் பாடணும்
இவ்வாறு சரோஜா தேவி கூறியுள்ளார்.

 

[youtube-feed feed=1]