சென்னை: தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களை விட அதிகமாகவே உள்ளது. இருந்தாலும் கடந்த ஒரு மாதமாக, பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத் தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இன்று புதிதாக 5795 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப் பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக  சென்னையில் இன்று ஒரே நாளில் 1,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,20,267-ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில்,  1039 பேர் கொரோனா சிகிச்சையில்  இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,05,494 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய  நிலையில், 12,256 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 16 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவுக்க பலியானோர் எண்ணிக்கை 2,517 ஆக உயர்ந்துள்ளது.

[youtube-feed feed=1]