கொரோனா முடக்கம் காரணமாக தமிழகத்தில் அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையில் கடந்த 18ந்தேதி முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால் சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும், 14,300 பேருக்கு இ-பாஸ் வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாண், தமிழக அரசு அனுமதிக்கும் தளர்வு இ-பாஸின் அடிப்படையில் மட்டுமே என்பதை சென்னை திரும்பும் ஆயிரக்கணக்கானோர் உணர வேண்டும் என்றும், கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜி.சி.சி) பின்பற்றும் தனிமைப் படுத்தப்பட்ட முறை தொடர்ந்து கண்டிப்பாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.
சென்னைக்கு வருபவர்கள் தற்போதுள்ள விதிகளின்படி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும், மேலும் அவர்களின் நகர்வுகளை அதிகாரிகள் கண்டிப்பாக கண்காணிப்பார்கள்.
உதாரணமாக, மாநிலத்தின் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து 48 மணி நேரத்திற்குள் நகரத்தை விட்டு வெளியேறுபவர்கள் வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை பின்பற்ற வேண்டிய தில்லை. இருப்பினும், அவர்கள் சொந்த மாவட்டத்திற்குத் திரும்பும்போது தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
யாராவது சென்னைக்கு வந்து 48 மணி நேரத்திற்குள் திரும்பி வரவில்லை என்றால், அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். “அவர்கள் தங்குமிடத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்படும்” . இ-பாஸுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்கள் வழங்கிய முகவரியின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
கார்ப்பரேஷன் ஏற்கனவே ஒரு வலுவான வீட்டு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு முறையைக் கொண்டுள்ளது, இதைப் பயன்படுத்தி, வெளியிடத்தில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு, நோயாளிகளின் தொடர்புகள், பரிசோதிக்கப்பட்டவர்கள் மற்றும் முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள் உட்பட பல வகை மக்களைக் கண்காணிக்கின்றனர்.
உண்மையில், குடியிருப்பாளர்கள் ஒரு சில சந்தர்ப்பங்களில், தங்கள் வீடுகளுக்கு வெளியே செல்வதைக் கண்டால், காவல்துறையின் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பார்கள்.
கடந்த திங்களன்று மட்டும், குடிமை அமைப்பு 14,355 பேருக்கு இ-பாஸ் வழங்கி இருப்பதாகவும், அவர்களில் , 11,608 பேர் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து திரும்பி வந்தவர்கள். இதனுடன் ஒப்பிடுகையில், கடந்த வாரம் வரை இ-பாஸ் விதிமுறைகள் கடுமையாக இருந்தபோது, தினசரி 5,000 பேர் மட்டுமே சென்னைக்கு வந்துள்ளனர் என்பது மாநகராட்சி தரவுகள் தெரிவிக்கின்றன.