மகாராஷ்டிரா:
காராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மாநிலத்தின் முழு அடைப்பை நீக்கும் செயல்முறை படிப்படியாக செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் அச்சுறுத்தல் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில், மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையை அவர் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மகாராஷ்டிராவில் முழு அடைப்பு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை வரை மகாராஷ்டிராவில் மட்டும் 5, 84, 754 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 19, 749 பேர் உயிரிழந்துள்ளனர்.   கொரோனா தாக்குதலை ஆய்வுசெய்ய மகாராஷ்டிராவில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவுடன் தாக்கரே வீடியோ மூலம் பேசுகையில், எப்போது வெளியே வருவோம் என்பதைவிட முழு அடைப்பை எவ்வாறு படிப்படியாக நீக்குகின்றோம் என்பது  மிக முக்கியம் என்று தெரிவித்துள்ளார். முழு அடைப்பை அவசரஅவசரமாக நீக்கி அதனை மீண்டும் திணிக்க நான் விரும்பவில்லை.
மேலும் மாநிலத்தில் பருவமழையும் தீவிரமாக உள்ளதால், இதனைப் படிப்படியாக தான் நீக்க வேண்டும் என்று தெரிவித்த உத்தவ் தாக்கரே, பருவமழை காலத்தில் மழை காரணமாக பரவும் நோய் தொற்றிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்