கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார் பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம். அவர் குணம் அடைந்து சீக்கிரம் திரும்பி வரவேண்டும் என்று நடிகர் சிவகுமார் வீடியோ வெளியிட்டிருக் கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
பாலு, என்னை விட நீங்க 4 வயசு சின்னவர். அதனால தம்பின்னே கூப்பிட லாம். உலகமே கொண்டாடக் கூடிய ஒப்பற்றப் பாடகர். நீங்க நிறைகுடம். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் எனக்காக பாடியிருக்கீங்க. முதன் முதலாக நீங்க எனக்கு எந்த படத்துல பாடுனீங்க, ஞாபகம் இருக்கா?
’மூன்று தெய்வங்கள்’ படத்துல, எனக்கு நீ பாடிய பாடல் ’முள்ளில்லா ரோஜா முத்தாரம் பொன்னூஞ்சல் கண்டேன்’ பாடல். அடுத்து ஏபிஎன் இயக்கிய ‘கண்காட்சி’ படத்துல அனங்கன் அங்கஜன் அன்பன் என்ற கடினமான பாடல் அழகாக பாடினாய். சிட்டுக்குருவி பாட்டு உலகம் முழுவதும் போயிட்டிருக்கு, ’என் கண்மணி என் காதலி’ பாட்டு. எல்லாவற் றுக்கும் மேல் என்னோட நூறாவது படத்துக்கு பாடுடியே, ’மாமன் ஒரு நாள் மல்லிகைப்பூ கொடுத்தான்..’ அதுக்குப் பிறகு, ’உச்சி வகுந்தெடுத்து பச்சமலை பக்கத்துல..’
இந்தப் பாட்டுக்கு நீங்க கொடுத்த எமோஷனுக்கு 45 நாள், காடுகள்லயும் மலைகள்லயும் வெயில்லயும் பனியிலயும் காய்ஞ்சு வறண்டு, உதட்டுல ரத்தம் வர வச்சு நான் நடிச்சேன். வாழ்க்கையில எத்தனையோ சவால்களை சந்திச்சவர் நீங்க.. கொரோனாவும் ஒரு சவால், சீக்கிரம் குணமடைஞ்சு ஆஸ்பத்திரியில இருந்து வெளியில வாங்க பாலு”.
இவ்வாறு நடிகர் சிவகுமார் கூறி உள்ளார்.