டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27,01,604 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகம் உள்பட குறிப்பிட்ட 10 மாநிலங் களில தொற்று பாதிப்பு தீவிரமாகி உள்ளது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று (17ந்தேதி) காலை நிலவரப்படி 26லட்சத்து 47ஆயிரத்து 316 பேராக இருந்த நிலையில், இன்று (18ந்தேதி) காலை நிலவரப்படி 27,01,604 ஆக உயர்ந்துள்ளது. தினசரி அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில்,  உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருந்து லவருகிறது.

தற்போதைய நிலையில்,  இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 6லட்சத்து 72 ஆயிரத்து 924 ஆக உள்ளது.

இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 18லட்சத்து 76ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 51ஆயிரத்து 925 ஆக அதிகரித்து உள்ளது.

தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு  நேற்று ஒரே நாளில் 8493 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது.

2வது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது. நேற்று 5890 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 3லட்சத்து 43 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளது.

2,96,609 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு 3வது இடத்தில் ஆந்திர மாநில மும்,  2,33, 283 பேர் பாதிப்புடன் 4வது இடத்திலும் கர்நாடக மாநிலமும், 5வது இடத்தில் உத்தரபிரதேச மாநிலமும் தொடர்ந்து வருகிறது.