சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ஏராளமான பாஜகவினர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னையில் பாஜக அலுவலகமான கமலாலயாவில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக அரசியலில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்து சட்டசபைக்கு அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வரும் சட்டசபை தேர்தலிலும் தொடரும். தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் கணிசமான பேர் வெற்றி பெற்று சட்டசபை செல்வார்கள் என்று கூறினார்.
[youtube-feed feed=1]