
லண்டன்: இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக, முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
அந்த அணியின் அபிட் அலி 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், முகமது ரிஸ்வான் 60 ரன்கள் எடுத்து இன்னும் களத்தில் உள்ளார். பாபர் ஆஸம் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். வேறு எந்த வீரர்களும் சோபிக்கவில்லை. நஸீம் ஷா மட்டுமே தற்போது முகமது ரிஸ்வானுடன் களத்தில் உள்ளார்.
இங்கிலாந்து தரப்பில், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆண்டர்சன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சாம் கர்ரன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
[youtube-feed feed=1]