புதுடெல்லி:
தியாகியின் மரணத்தால் நச்சு எண்ணம் கொண்ட தொலைக்காட்சி விவாதம் என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

மாரடைப்பால் காலமான தனது செய்தி தொடர்பாளர் ராஜ்வ் தியாகியின் அகால மறைவுக்கு “நச்சு” எண்ணம் கொண்ட தொலைக்காட்சி விவாதத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.
நேற்று மாலை 5 மணி அளவில் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட ராஜ்வ் தியாகி நிகழ்ச்சி முடிந்தவுடன் மார்பு வலிப்பதாக தெரிவித்துள்ளார், அதன்பிறகு சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனால் மருத்துவமனையில் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இதைப்பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இதுபோன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் விவாதங்கள் என்ற பெயரில் எளிய மக்களை கொள்வார்கள்??? டி ஆர் பிக்காக இதுபோன்ற விவாதங்களை வைத்து இன்னும் எவ்வளவு நாட்கள் தொலைக்காட்சியை நடத்துவார்கள்??? இதுபோன்ற வகுப்புவாத நிகழ்ச்சிகளை கொண்டு இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தான் நாட்டின் ஆன்மாவை விஷமாக்குவார்கள்??? இன்னும் எவ்வளவு நாட்கள்? என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோர் தியாகியின் மனைவியுடன் பேசி அவர்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

இதைப் பற்றி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சிங்கத்தை இழந்துள்ளது. கட்சி மீதான அவரது அன்பை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
திரு ராஜீவ் தியாகியின் திடீர் மரணத்தை கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்! அவர் இளமையாக இருந்தார். அவரை இழந்தது கட்சிக்கு ஒரு பேரிழப்பாக இருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த துக்க நேரத்தில் நேரத்தில் கடவுள் அவர்களுக்கு பலம் அளிக்கட்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல் பதிவிட்டுள்ளார்.
மேலும் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில்: எனது நண்பர் ராஜீவ் தியாகி இனி எங்களுடன் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனது மனம் அதனை ஏற்க மறுக்கிறது, மாலை 5 மணிக்கு அவர் எங்களுடன் விவாதத்தில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் திடீரென இவ்வாறு நிகழ்ந்தது வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை காண்பிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel