சென்னை
மத்திய அரசின் சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் அதிகாரிகளுக்கான விருது தமிழகத்தில் 6 அதிகாரிகளுக்கு வழக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களிலும் குற்ற வழக்குகளில் சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் பெற உள்ளோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதில் தமிழகத்தை சேர்ந்த ஆறு காவல்துறை அதிகாரிகளின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இதில் ஐந்து பேர் பெண் அதிகாரிகள் ஆவார்கள்.
இவர்கள் ஜான்சிராணி, சந்திரகலா, பொன்னம்மாள், கலா, மற்றும் கவிதா ஆவார்கள்.
விருது பெறுவோரில் ஒரே ஒரு ஆண் அதிகாரி வினோத்குமார் ஆவார்.