ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக்குழந்தைகளும் பங்கேற்பர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாவட்டம் தோறும் 10 சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று பொன்னாடை செலுத்தி மரியாதை செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல் சமூக நலத்துறை அமைச்சர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு சென்று இனிப்பு பெட்டகத்தை மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்படுகிறார்.
முன்களப்பணியாளர்களுக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்க உள்ளார்.
சுதந்திர தின விழாவை காண பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் நேரில் வரவேண்டாம்,
தொலைக்காட்சி மற்றும் வானொலியில் கண்டு/கேட்டு ரசிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து பள்ளிகளிலும் தனிநபர் இடைவெளியை பின்பற்றி எளிய முறையில் விழாவை கொண்டாடவும், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களை அழைத்து சிறப்பிக்க வேண்டும்.
சுய விருப்பத்தின்அடிப்படையில் கலந்துகொள்ளும் மாணவர்களை மட்டுமே விழாவில் அனுமதிக்க வேண்டும்.
தற்போதைய கரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, விழாவில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்பன உட்பட பல்வேற வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.