சென்னை:
டலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

வறட்சி இயற்கை சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நஷ்டத்திற்கு உள்ளாகும் விவசாயிகள் விரக்தியில் தற்கொலை செய்கின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தரதீர்வு காண விவசாயிகளை உற்சாகப்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு துவக்கியுள்ளது. இதன்படி ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய்ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. முழுக்க முழுக்க விவசாயிகளுக்கான இந்த திட்ட்த்தில் விவசாயிகள் அல்லாத 500-க்கும் மேற்பட்டோர் பலனடைந்திருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.