பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் ’மர்டர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆந்திராவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. மகளை கடத்தி சென்று திருமணம் செய்துவிட்டதாக அப்பெண்ணின் தந்தை அந்த இளைஞரை கூலிப்படையை வைத்து கொலை செய்தார். இது பரபரப்பானது.
ஆனால் அப்படத்தை எதிர்த்து பிரணாயின் மனைவி, மாருதி ராவின் மகள் அம்ருதா ஆகிய இரண்டு பேர் சமீபத்தில் நலகொண்டா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இது தொடர்பாக வர்மாவை கோர்ட்டில் ஆஜர் ஆக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் வர்மாவின் வக்கீல் கோர்ட்டில் ஆஜாராகி, வர்மாவுக்கு கடுமையான சாய்ச்சல் இருப்பதாகவும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த தகவல் ஊடகங்களில் வெளியா னதையடுத்து வர்மா, தனக்கு பாதிப்பு எதுவும் இல்லை. உடல்நிலை ஃபிட்டாக இருப்பதாக மெசேஜ் வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.
வர்மா ஃபிட்டாக இருப்பதாக கூறும் போது, அவரது வக்கீல் கோர்ட்டில் வர்மாவுக்கு கொரோனா, காய்ச்சல் என்று எப்படி சொன்னார் என்ற கேள்வி எழுந்துள்ளது.