புதுடெல்லி: சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டிலிருந்து, இந்தியப் பொருளாதாரம் 2020-21ம் ஆண்டு காலக்கட்டத்தில்தான் மோசமான நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கிறார் உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கெளஷிக் பாசு.
“இப்போதைய இந்த மோசமான நிலை, காலனி ஆதிக்க இந்தியாவோடு ஒப்பிடத்தக்கது” என்கிறார் அவர்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பிரிவினைவாத அரசியல் மற்றும் நம்பிக்கையின்மை நிலவும் இந்த சூழல், நாட்டில் முதலீடு மற்றும் வேலை உருவாக்கத்தை கடுமையாக பாதிக்கிறது.
பிரதான கொள்கை முன்னெடுப்புகள் தொடர்பாக இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 2019-20ம் ஆண்டு காலக்கட்டத்தில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி 4.2% என்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.