நியூயார்க்: உலகிலேயே அமெரிக்கா மட்டும்தான் பைத்தியக்காரத்தனமான கொரோனா பரிசோதனை நடைமுறையைக் கொண்டுள்ளது என்று கடுமையாக சாடியுள்ளார் உலக பணக்காரர்களில் ஒருவராக பில்கேட்ஸ்.
அவர் கூறியுள்ளதாவது, “அமெரிக்க கொரோனா பரிசோதனை நடைமுறைகள் பைத்தியக்காரத்தனமானவை. பணக்காரர்கள் மட்டுமே விரைவான மற்றும் தெளிவான பரிசோதனை முடிவுகளைப் பெற முடியும் என்ற நிலை உள்ளது.
உலகில், வேறு எந்த நாட்டிலும் இந்த நிலைமை இல்லை. பரிசோதனை செயல்பாடுகளை மேம்படுத்துமாறு அரசைக் கேட்க முடியாத சூழல் நிலவுகிறது. ஏனெனில், தங்களின் செயல்பாடு சிறந்தது என்று சொல்லிக்கொள்வதை அவர்கள் விரும்புகிறார்கள்.
அமெரிக்க அரசின் பரிசோதனை செயல்முறைகள் மிகவும் சமமற்ற ஒன்றாக உள்ளன. இந்த நிலை வேறு எங்கும் கிடையாது. ஆனால், பலகோடி டாலர்கள் செலவிடப்படுகிறது” என்றுள்ளார்.