சென்னை
தமிழகத்தில் இன்று 5994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆகி உள்ளது.

இதில் சென்னையில் மட்டும் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து 1000க்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70000க்கும் அதிகமான அளவில் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இவ்வளவு சோதனை நடந்தது இதுவே முதல் முறையாகும்.
இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை பாதிக்கப்பட்டோரை விட அதிகமாகும்
இன்று 6020 பேர் குணம் அடைந்துள்ளனர்.
அதே வேளையில் பாதிப்பு எண்ணிக்கை 5994 மட்டுமே ஆகும்.
இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டோரில் 80.38% பேர் குணம் அடைந்துள்ளனர்.
[youtube-feed feed=1]