விஜய் நடிக்க அட்லி இயக்கிய படம் ‘பிகில்’. இதில் இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருந்தார். இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந் தாலும் பெண்கள் கால்பந்து அணியில் இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்திருந் தனர். இதில் மின்னொளி என்ற பாத்திரத்தில் ஆதிரை சௌந்தரராஜனும் நடித்திருந்தார். இவர் விஜய்க்கு மறக்க முடியாத பரிசு அளித்தாராம். அந்த தகவல் வெளியாகி உள்ளது.


அதுவொரு ஒரு கேம் இயந்திரம். படத்தில் இடம்பெறுவது மணிப்பூர் மற்றும் தமிழ்நாடு அணியின் வீராங்கனைகளை உள்ளடக்கிய பொம்மைகள், கோச்சாக நடித்த விஜய்யின் பொம்மையும் அதில் இணைத்திருந்தார்.
பரிசை பார்த்த விஜய் ‘ பிகில் பட அணியை பார்த்ததுபோலே இருக்கிறது ஒரு உணர்வு. இந்த பரிசை எப்போது பார்த்தாலும் பிகில் படத்தின் ஞாபகம் வரும்’ என்று கூறினார். பரிசை விஜய் ஏற்றுக்கொண்டது ஏக மகிழ்ச்சியாக இருந்ததாக ஆதிரை தெரிவித்தார்.

[youtube-feed feed=1]