8
ஸ்லாமிய அமைப்பான, “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்” சார்பில் கடந்த 31ம் தேதி திருச்சியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. “தர்கா, கைகளில் கயிறு கட்டுவது போன்றவை இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிரானது. இது போன்ற மூடத்தனங்களை ஒழிப்பதே மாநாட்டின் நோக்கம்” என்று அந்த அமைப்பினர் அறிவித்தனர். அப்போதிருந்தே சர்ச்சை ஆரம்பமாகிவிட்டது.
தர்கா வழிபாட்டில் ஈடுபாடுகொண்ட இஸ்லாமியர்கள், இந்த மாநாடு குறித்து காவல்துறையில் புகார் கொடுத்ததோடு, நீதிமன்றத்திலும் மாநாடு நடத்தக்கூடாது என்று வழக்கு தொடுத்தனர்.
நீதிமன்றம், தடைவிதிக்க மறுக்கவே, மாநாடு நடைபெற்றது.  இந்த நிலையில், அம் மாநாடு குறித்து  அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து முகநூலில் பெர்தூர் ராஜகுமாரன் (Firthouse Rajakumaaren Nazeer) எழுதி இருக்கும் பதிவு:
“தர்கா வழிபாட்டில் இப்போது யாருக்கும்  உடன் பாடில்லைதான். ஆனால்  ஜியாரத் – செய்யலாம் . அதற்காக, ஷிர்க் ஒழிப்பு என்கிற பெயரில்  தமிழ் முஸ்லிம்களின் பண்பாட்டு அடையாளங்களான தர்ஹாக்களை இடிப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
தர்ஹாக்கள் தமிழ் முஸ்லிம்களின் பண்பாட்டு அடையாளங்கள் மட்டுமல்ல தமிழகத்தில்
இஸ்லாம் பரவியதின் வேர்கள் அவை . இஸ்லாமிய வரலாற்றை அழிக்க நினைப்பதும்
அந்த பண்பாட்டு வேர்களைப் புறக்கணிக்கும்  நடவடிக்கைகளும் மிக ஆபத்தான போக்கு
மட்டுமல்ல நம்முடைய மதச்சார்பற்ற  ஜனநாயகத்திற்கு விரோதமானதும் கூட .
# இப்படி தர்ஹாக்களை இடிக்கச் சொல்லியும் , சதா சக முஸ்லிம்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி  ஒற்றுமையைக் குலைத்து வரும் உங்களுக்கும்,  பாபர் மசூதியை இடித்து தகர்த்து
இந்திய தேசியத்தின் ஒற்றுமையைக் குலைத்த- குலைக்கும் பாசிசவாதிகளுக்கும் என்ன வேறுபாடு ..?”

  • இவ்வாறு தனது முகநூல் பதிவில் கூறியிருக்கிறார் பெர்தூஸ்.