லக்னோ:

த்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 2300 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள், தங்களது பெயர், முகவரி, மொபைல் எண்களை மாற்றி கொடுத்து ஏமாற்றி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.  நேற்று (ஆகஸ்டு 2ந்தேதி) மட்டும் 52,972 பேருக்கு புதிதாக தொற்று உறுதியான நிலையில்,  மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 18,03,696 ஆக உயர்ந்துள்ளன.

உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை 89,048 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இதுவரை 51,334 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1677  கொரோனா நோயாளிகள்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2300  லக்னோ நோயாளிகள், தங்களது பெயர், முகவரி, மொபைல் எண்களை மாற்றி கொடுத்து ஏமாற்றி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

[youtube-feed feed=1]