சென்னை:
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று சென்னையை அடுத்து மதுரையில் அதிகரித்து வருவதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 6ந்தேதி மதுரை செல்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் கூறிய தாவது,
கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட அவசியமில்லை. ஒருவேளை தொற்று ஏற்பட்டுவிட்டால் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும், விரைவில் குணமடைந்து விடலாம். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் 21 கோவிட் கேர் சென்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
ஏற்கனவே வேளாண்மை பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை மற்றும் போலீசாருக்கான கோவிட் கேர் சென்டர் என 5 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. இங்கு அனைத்து வசதிகளும் உள்ளன.
தற்போது கல்லூரிகள் திறக்கப்பட வேண்டிய சூழ்நிலை வந்தால் மாற்று ஏற்பாடாக தகவல் தொழில் நுட்பத்துறை (எல்காட்) வளாகத்தில் 900 படுக்கைகள் கொண்ட கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த கோவிட் கேட் சென்டரை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 6ந்தேதி மதுரைக்கு வருகிறார். அப்போது அவர் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மேற்கொள்ள வேண்டியவை குறித்து ஆலோசனை வழங்குவார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Patrikai.com official YouTube Channel