சென்னை:
புகார் தொடர்பாக ஒருவரை கைது செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி கவமாக செயலாற்ற வேண்டும்  என்று அனைதது மாவட்ட காவல் கண்காணிப்பாள்ரகள், மாநகர ஆணையர்களுக்கு டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவல்துறையினர் அத்துமீறில், விசாரணைகள் சித்வதை, படுகொலை போன்ற சம்பவங்கள் அதித்து வருவதால், புகார் தொடர்பாக காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உச்சநீதி மன்றம் சமீபத்தில் தெளிவுபடுத்தி இருந்தத.
சமீபத்தில்,  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும்  பரபரப்பை ஏற்படுத்தியது.  இதையடுத்து, ஏற்கனவே உச்சநீதி மன்றம் அளித்த உத்தரவை தமிழகத்திலும் அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 7 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான தண்டனைகள் பெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்களை தகுந்த காரணங்கள் அல்லது முகாந்திரம் இல்லாமல் கைதுசெய்யக் கூடாது.
விசாரணை அதிகாரியாக உள்ளவர் குற்றங்களுக்கான தன்மையை ஆராய்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கான அவசியம் ஏற்பட்டால் அதனை எழுத்து மூலமாக பதிவு செய்த பின்பே கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
புகார் தொடர்பாக  முறையாக செய்யாத விசாரணை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,  விசாரணை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட வேண்டும்.
குற்றவாளிகளை நீதித்துறை நடுவர்களிடம் ஆஜர்படுத்தும் போது அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற முழு விவரத்தையும் நீதித்துறை நடுவரிடம் விளக்கம் அளிக்க வேண்டும்.
இயந்திரத்தனமாக செயல்படும் விசாரணை அதிகாரிகள் மீது உயர்நீதிமன்றம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கவனமாக கடைபிடித்து செயலாற்ற வேண்டும், இதை மீறினால் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும்”  என தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர ஆணையர்களுக்கு டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.