சென்னை:
தமிழகத்தில் பொதுமுடக்கம் ஆகஸ்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணங் களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்ற பழைய நடைமுறையே தொடரும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், 6வது கட்ட ஊரங்க இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், 7வது கட்ட ஊரடங்கு ஆகஸ்டு 30ந்தேதிவரை தளர்வுகளுடன் நிட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஞாயிற்று கிழமைகளில் பொது முடக்கம் என்றும், ற்போது இருக்கும் ஊரடங்கு விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் அறிவித்தார். மேலும், ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில் திருமணங்களில் எத்தனை பேர் கலந்து கொள்ளலாம் என்பது பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது
. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும் என்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் விளக்கம் தெரிவித்துள்ளது.