சென்னை:
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் ஒட்டகம், ஆடு, மாடு போன்றவற்றை பலியிட அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை வட இந்தியர் நலச்சங்கத் தலைவர் ஜெ.ஹூக்கும் சிங் என்பவர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒட்டகம், ஆடு, மாடு போன்ற விலங்குகளை பொது இடங்களில் பலியிடுவதைவழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ளது. இதனால், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விலங்குகளை பொது இடங்களில் பலியிட தடை விதிக்கவேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘ஒரு நாட்டின் பெருமை யும், மதிப்பும் விலங்குகளை எப்படி பராமரிக்கிறோம் என்பதில்தான் தீர்மானிக்கப்படுகிறது’ என தேசப்பிதாமகாத்மா காந்தி தெரிவித்துள்ளார்.
பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. பொது இடங்களில் விலங்குகளை பலியிட தடைவிதித்து மத்திய அரசு ஏற்கெனவே அறிவிப்பாணை பிறப்பித்துள்ள தால் அதை தமிழக அரசு கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும்.
இதுதொடர்பாக மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் விதிகளை வெளியிட்டுள்ளது போல தமிழக அரசும் உரிய விதிகளை வெளியிட வேண்டும்.
குறிப்பாக ஒட்டகம், ஆடு, மாடு போன்றவற்றை அனுமதிக்கப்பட்டுள்ள, அங்கீகரிக்கப்பட்ட வதைக் கூடங்களைத் தவிர்த்து, எக்காரணம் கொண்டும் பொது இடங்களில் பலியிட அனுமதிக்கக் கூடாது.
விலங்குகள் பலியிடல் தொடர்பாக மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை தமிழக அரசு அமல்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.
அத்துடன் இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்டு 20-ம் தேதிக்கு தள்ளிவைத் துள்ளனர்.