கனடா: 2024ம் ஆண்டில் தான் விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
உலக நாடுகளுக்கு இடையே நோய் பரவாமல் தடுக்கும் வகையில் விதமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அதன் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தியாவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை உள்ளது.
இந்நிலையில் கனடாவில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம், உலளவில் விமானப் போக்குவரத்து 2024ம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று கூறி உள்ளது. தற்போதைய நிலைமையின் படி ஊரடங்கால் 2020ம் ஆண்டில் 55% விமான சேவை பாதிப்படையும் என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel