மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 9,211 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட, பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது.
நாடு முழுவதும் பரவி உள்ள கொரோனாவால், மகாராஷ்டிராவில் தான் அதிக பாதிப்பு காணப்படுகிறது. இருப்பினும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தற்போதும் அமலில் உள்ளது.
இந் நிலையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 9,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆகையால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,00,651 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 298 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கையானது 14,463 ஆக உயர்ந்து இருக்கிறது. அதே நேரத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,39,755 ஆக உயர்ந்துள்ளது.
அதன்காரணமாக, குணமடைந்தோரின் விகிதம் 59.84 சதவீதமாக உள்ளது. அது மட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,46,129 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.
Patrikai.com official YouTube Channel